கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஐந்து மாகாணங்களில் 5,738 குடும்பங்களைச் சேர்ந்த 16,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, வடமத்திய மாகாணத்தில் 93 குடும்பங்களைச் சேர்ந்த 356 நபர்களும், வட மாகாணத்தில் 491 குடும்பங்களைச் சேர்ந்த 1,496 நபர்களும், கிழக்கு மாகாணத்தில் 5,086 குடும்பங்களைச் சேர்ந்த 14,806 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்பு
அத்தோடு, மத்திய மாகாணத்தில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 33 நபர்களும், ஊவா மாகாணத்தில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 239 நபர்களும், மொத்தமாக 5,738 குடும்பங்களைச் சேர்ந்த 16,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் 98 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 77 குடும்பங்களைச் சேர்ந்த 239 பேர் எட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.