Home இலங்கை சமூகம் தேயிலை கொழுந்து பறிக்கச் சென்ற தாய் : 16 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்

தேயிலை கொழுந்து பறிக்கச் சென்ற தாய் : 16 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்

0

சூரியகொல்ல வெவத்தென்ன கிராமத்தைச் சேர்ந்த ஒரு வயதும் நான்கு மாதமுமேயான குழந்தை நேற்று (08) பிற்பகல் வீட்டுக்கு அருகில் உள்ள தண்ணீர் குழியில் விழுந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக மடோல்சிம காவல்துறையினர் தெரிவித்தனர்.

வேவத்தென்ன, களுகஹகதுர மரகொம்மன பகுதியைச் சேர்ந்த டி.எம்.சதலி நிம்சரா (16 மாதங்கள்) என்ற பெண் குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளது.

தேயிலை கொழுந்து பறிக்கச் சென்ற தாய்

குழந்தையின் தாயார், குழந்தையைப் வீட்டில் இருந்த மற்றுமொரு சிறு குழந்தையை நம்பி விட்டு விட்டு தேயிலை கொழுந்து பறிப்பதற்காக வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.

மரணத்தில் சந்தேகம்

சிசுவின் மரணம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதால், பிரேத பரிசோதனைக்காக பதுளை(badulla) மாகாண பொது வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version