Home இலங்கை சமூகம் 16 வயது பாடசாலை மாணவி மாயம்: பொது மக்களிடம் உதவி கோரியுள்ள காவல்துறையினர்

16 வயது பாடசாலை மாணவி மாயம்: பொது மக்களிடம் உதவி கோரியுள்ள காவல்துறையினர்

0

கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ள சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க எட்டம்பிட்டிய காவல்துறையினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

பதுளை (Badulla) – எட்டம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவரே இதன்போது காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுமி கடந்த 03 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக எட்டம்பிட்டிய காவல் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

காணாமல் போன சிறுமி

இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் காணாமல் போயுள்ள சிறுமியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

சிறுமியின் தாயார் இது தொடர்பான முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளதுடன், காணாமல் போன சிறுமி சுமார் 5 அடி 2 அங்குல உயரமும் சாதாரண உடலமைப்பும் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இறுதியாக வெளிர் பச்சை நிற, நீளமான சட்டை அணிந்திருந்ததாகவும், அவரது இடது கையின் முழங்கைக்கு அருகில் சிறிய வெட்டு காயம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு எட்டம்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

பொறுப்பதிகாரி – எட்டம்பிட்டிய – 0718591528,  எட்டம்பிட்டிய காவல் நிலையம் – 0552295466

NO COMMENTS

Exit mobile version