Home இலங்கை குற்றம் வெளி நாடுகளில் வாழும் 167 இலங்கையர்களை கைது செய்ய நடவடிக்கை

வெளி நாடுகளில் வாழும் 167 இலங்கையர்களை கைது செய்ய நடவடிக்கை

0

இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச குற்றவியல் பொலிஸார் பிறப்பித்த சிவப்பு பிடியாணை கீழ் அவர்களை நாட்டிற்கு திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் உதவியுடன் அவர்களை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


சிவப்பு பிடியாணை

வெளிநாடுகளில் உள்ள 167 இலங்கை குற்றவாளிகளுக்கு சர்வதேச பொலிஸாரால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குற்றவாளிகள் தற்போது டுபாய், இந்தியா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் வசித்து வருவதாக பொலிஸார் தகவல் கிடைத்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version