Home இலங்கை குற்றம் யாழில் கடல் அட்டைகளுடன் 17 பேர் கைது

யாழில் கடல் அட்டைகளுடன் 17 பேர் கைது

0

யாழில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 4255 கடல் அட்டைகளுடன் 17 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம், கல்முனை மற்றும் வினயாசோதி கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போதே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சுமார் 4255 கடலட்டைகள்
மற்றும் 04 டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக நடவடிக்கைகள்

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்
யாழ்ப்பாணம்,
மணியத்தோட்டம், உதயபுரம், குருநகர், குருநாரு பன்னக்குறுப்பு மற்றும் அரியாலை
ஆகிய பகுதிகளில்
வசிக்கும் 21 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக, கடலட்டைகள், நான்கு டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி
உபகரணங்களுடன்  யாழ்ப்பாணம் சட்டப் பணிப்பாளர் அலுவலகத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version