Home இலங்கை சமூகம் யாழில் 17 வயது மாணவன் உட்பட 10 பேர் அதிரடியாக கைது

யாழில் 17 வயது மாணவன் உட்பட 10 பேர் அதிரடியாக கைது

0

யாழில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 17 வயது மாணவர் உள்ளிட்ட 10 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்றதாக யாழ். காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில், காவல்துறையினர் நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின் போது குறித்த 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.

விசேட சோதனை

இதன்போது அவர்களிடமிருந்து, ஐஸ் போதைப்பொருள், போதை மாத்திரைகள் மற்றும் கேரள கஞ்சா என்பன பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, வவுனியா மடுக்கந்த பகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை காவல்துறை நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டதுடன் கஞ்சா செடியும் கைப்பற்றப்பட்டது. 

கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர்.

NO COMMENTS

Exit mobile version