Home இலங்கை சமூகம் சீனி தொழிற்சாலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட கரும்பில் 175 கிலோ கருங்கல்

சீனி தொழிற்சாலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட கரும்பில் 175 கிலோ கருங்கல்

0

செவனகல சீனித் தொழிற்சாலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட கரும்பு தொகைக்குள் இருந்து பாரிய கருங்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கருங்கல் சுமார் 175 கிலோ அளவிலான எடை கொண்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.

கரும்பு தொகைக்குள் கருங்கல் மறைத்து வைத்து அனுப்பப்பட்டதன் மூலம் சதிநாசகார வேலையொன்றுக்கான முயற்சி இடம்பெற்றுள்ளதாகவும், எவ்வாறான தடைகள் வந்தபோதும் சீனி விலையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதில் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளை கைவிடப் போவதில்லை என்றும் வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதியமைச்சர் ஆர்.எம். ஜயவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.

பொலிஸ் விசாரணைகள்

சம்பவம் தொடர்பில் தற்போது பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே அரசாங்கம் தனது தோல்வியை மறைத்துக் கொள்ள இவ்வாறான நாடகங்களை முன்னெடுத்துள்ளதாக கரும்பு செய்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version