Home இலங்கை சமூகம் கொழும்பில் பதற்றம் : போராட்டத்தில் குதித்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள்

கொழும்பில் பதற்றம் : போராட்டத்தில் குதித்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள்

0

இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் குழுவொன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொல்துவ நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இன்று (24) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவ வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் முப்படை மற்றும் காவல்துறை சேவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற படைவீரர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

ஓய்வூதியத்தை வழங்குமாறு கோரி

தாம் உயிரிழந்த பின்னர் தமது ஓய்வூதியத்தை எவ்வித குறைப்பும் இன்றி தமது தங்கியிருப்பாளர்களுக்கு வழங்குமாறு கோரியே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அக்குழுவினர் நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முற்பட்ட வேளையில், காவல்துறையினர் அவர்களைத் தடுக்க முற்பட்டதால் அங்கு பதற்றமான நிலைமையும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/br8qh42PoTw

NO COMMENTS

Exit mobile version