Home இலங்கை கல்வி களனி பல்கலை படைத்த சாதனை : உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு

களனி பல்கலை படைத்த சாதனை : உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு

0

களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவ ஆராய்ச்சி பிரிவு உயர் இரத்த அழுத்தத்தை திறம்பட கட்டுப்படுத்தக்கூடிய ஒரு புரட்சிகரமான மருந்தை உருவாக்கியுள்ளது.

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் மூன்று மாத்திரைகள் கொண்ட கூட்டு மருந்துக்கு பதிலாக, ஒரே ஒரு மாத்திரையை இந்தக் குழு உருவாக்கியுள்ளது.

88 வீத நோயாளிகளின் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில்

88% நோயாளிகளில் இரத்த அழுத்தத்தை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதாக மருத்துவ பரிசோதனைகள் காட்டுகின்றன.

ஜூன் மாதம் அமெரிக்க FDA ஆல் அங்கீகரிக்கப்பட்டு, செப்டம்பரில் WHO இன் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட இந்த மருந்து, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 60% வரை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு தசாப்த கால ஆராய்ச்சியின் விளைவு

இந்த திட்டம் கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால ஆராய்ச்சியின் விளைவாகும் என்று பேராசிரியர் டி சில்வா குறிப்பிட்டார். 

NO COMMENTS

Exit mobile version