Home இலங்கை சமூகம் வவுனியாவில் போக்குவரத்து சபைக்கு சொந்தமான 18 கிலோ கிறீஸ் களவு

வவுனியாவில் போக்குவரத்து சபைக்கு சொந்தமான 18 கிலோ கிறீஸ் களவு

0

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான வவுனியா(Vavuniya) சாலையில் 18 கிலோ கிறீஸ் களவு போயுள்ளதாக பொலிஸில்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த 17.11.2024 ஆம்
திகதி இரவு  இடம்பெற்றுள்ளதாக முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையில் கடந்த 17 ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை இரவு 6.00 மணிதொடக்கம் 11.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில்
புதியவாளியுடன் வைக்கப்பட்ட 18 கிலோ கிறீஸ் களவாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேருந்துகளின் தேவை

சாலையின் அரச போக்குவரத்து பேருந்துகளின் தேவைக்காக கொண்டுவரப்பட்ட இந்த
கிறீஸ் களவாடப்பட்டுள்ளமை அரச சொத்தினை களவாடும் சம்பவமாக
பார்க்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் சாலை முகாமையாளரால் வடபிராந்திய
பாதுகாப்பு முகாமையாளரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு விசாரணைகள்
மேற்கொள்ளப்பட்ட நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையில் கடந்த கொரோனா காலத்தில் 400
லீற்றர் டீசல் களவாடப்பட்டுள்ளது. அது தொடர்பில்இலங்கை போக்குவரத்து சபை
விசாரணைகளை மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என முறைப்பாட்டாளரால் கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version