Home இலங்கை சமூகம் செம்மணியில் இதுவரை 187 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

செம்மணியில் இதுவரை 187 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

0

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம்(29) 10
எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும்
10 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள்
கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

இதுவரையில் 44 நாட்கள்

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45
நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை 37 ஆவது
நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 44 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு
பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டு
தொகுதியுடன் 174 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இதுவரையில் 187 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version