Home இலங்கை 19 கைத்துப்பாக்கிகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது

19 கைத்துப்பாக்கிகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது

0
image

கொழும்பு தெமட்டகொட பகுதியில் சட்டவிரோத ஆயுதங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 19 கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட உள்நாட்டு துப்பாக்கிகள் எதேனும் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டவையா அல்லது கடத்தல் முயற்சியா என்ற கோணத்தில் தெமட்டகொட பொலிஸார் சந்தேக நபர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source: https://samugammedia.com/four-suspects-arrested-with-19-handguns-1780473225

NO COMMENTS

Exit mobile version