சிங்கப்பூருக்கு (Singapore) சொந்தமான சரக்கு கப்பலொன்று மோதி சேதமடைந்த அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மார்ச் 26 ஆம் திகதி குறித்த கப்பலானது பாலத்தின் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்த நிலையில் அந்த பாலம் உடனடியாக மூடப்பட்டது.
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட ஹமாஸ்: கேள்விக்குறியாகியுள்ள இஸ்ரேலின் நிலை
புனரமைப்பு பணிகள்
அதனை புனரமைக்கும் பணிகள் 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்ததையடுத்து அங்கிருந்து சுமார் 50 ஆயிரம் டன் இரும்பு பொருட்கள் அகற்றப்பட்டன.
இந்த பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் பால்டிமோர் பாலம் மீண்டும் திறந்துவைக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலில் வேலை வாய்ப்பு: பல கோடி ரூபா மோசடியில் சிக்கிய பெண்
இனப்பிரச்சினைக்கு ஜே.வி.பியின் தீர்வு: சுமந்திரன் வெளியிட்டுள்ள தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |