அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் உள்ள லெக்சிங்டன் நகரில், சுமார் 35
ஆண்டுகாலமாக இயங்கி வந்த டைசன் ஃபுட்ஸ் (Tyson Foods) மாட்டிறைச்சி ஆலை
மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி முடிவினால் சுமார் 3,200 தொழிலாளர்கள் நேரடியாக வேலை
இழக்கவுள்ளனர், இது அந்தச் சிறிய நகரத்தின் பொருளாதாரத்தை அடியோடு
பாதித்துள்ளது.
சுமார் 11,000 மக்கள் வசிக்கும் இந்த நகரில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் இந்த
ஆலையை நம்பியே தங்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ளனர்.
பெரும் நஷ்டம்
கால்நடைத் தட்டுப்பாடு மற்றும் மாட்டிறைச்சி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பெரும்
நஷ்டம் காரணமாக, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதியுடன் இந்த ஆலை தனது
செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆலை88R1IV மூடப்படுவதால் ஏற்படும் தாக்கம் தனிப்பட்ட தொழிலாளர்களோடு நிற்காமல்,
ஒட்டுமொத்த நகரத்தையும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
இங்கு பணிபுரியும் தொழிலாளர்களில் சரிபாதிக்கும் மேலானவர்களின் பிள்ளைகள்
உள்ளூர் பாடசாலைகளில் பயின்று வருகின்றனர்.
தொழிலாளர்கள் வெளியேற நேரிட்டால்,
பாடசாலைகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து ஆசிரியர்களும் வேலை இழக்கும்
அபாயம் உள்ளது.
மேலும்,தொழிலாளர்களை நம்பியிருந்த உணவகங்கள், மளிகைக் கடைகள் மற்றும் இதர
சிறு வணிகங்கள் வாடிக்கையாளர்கள் இன்றி முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
மாநில அரசு பல்வேறு மறுவாழ்வு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ள போதிலும், பல
தசாப்தங்களாகத் தங்கள் வாழ்க்கையை இந்த நகரில் கட்டமைத்த குடியேறிய மக்கள்,
இப்போது தங்கள் வீடுகளையும் கனவுகளையும் விட்டுவிட்டு வேறு இடங்களுக்குச்
செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
