கனடாவில் (Canada) பாரிய அளவிலான போதைப் பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேநபர்கள் ஹமில்டன் மற்றும் நயகரா ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து சந்தேகநபர்களிடமிருந்து கொக்கெய்ன்
, போதை மாத்திரைகள், கிறிஸ்டல் மெத்தப்பெட்டமைன் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள், ஆயுதங்கள், துப்பாக்கி ரவைகள், நாணயத்தாள்கள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீவிர விசாரணைகள்
இதேவேளை, அடையாளம் காணப்படாத சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் வகை ஒன்றும் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கு தொடர்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்த வலையமைப்பு தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.