Home இலங்கை குற்றம் இரண்டு மாதங்களில் மட்டும் 19 துப்பாக்கி சூடு சம்பவங்கள்

இரண்டு மாதங்களில் மட்டும் 19 துப்பாக்கி சூடு சம்பவங்கள்

0

இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து நேற்றையதினம்(05.03.2025) வரை 19 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நாட்டில் பதிவாகியுள்ளது.

கொழும்பில் இன்று(06) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

குறித்த 19 துப்பாக்கி சூடு சம்பவங்களில் 12 சம்பவங்கள் திட்டமிட்ட கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டவை என அவர் கூறியுள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்

எஞ்சிய 7 சம்பவங்களும் சில தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 68 சந்தேக நபர்களைக் கைது செய்த பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 6 T-56 துப்பாக்கிகளையும் கைப்பற்றியதாக புத்திக மனதுங்க கூறியுள்ளார்.

மேலும், 7 கைத்துப்பாக்கிகளும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட 8 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்கள், 1 வேன் மற்றும் 2 முச்சக்கர வண்டிகள் என்பன பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version