உண்ணிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மானிப்பாயைச் சேர்ந்த சத்தியசீலன் சானுஷா (19 வயது) என்ற இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை அளித்தல்
குறித்த யுவதி உண்ணிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தமை வைத்தியசாலையில்
இனங்காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவருக்கு 10 நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த யுவதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
