Home இலங்கை சமூகம் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாரிய அழிவு : நிதியத்திற்கு 19000இற்கும் அதிகமானோர் பங்களிப்பு

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாரிய அழிவு : நிதியத்திற்கு 19000இற்கும் அதிகமானோர் பங்களிப்பு

0

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாரிய அழிவுகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும்
தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நிறுவப்பட்ட ‘Rebuilding Sri
Lanka நிதியத்துக்கு, டிசம்பர் 2 வரை 19,000இற்கும் அதிகமான வெளிநாட்டில்
பணியாற்றும் இலங்கையர்கள் பங்களிப்புச் செய்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலையால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம்
நிவாரணம் வழங்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ
வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள் பலர் சந்தர்ப்பம் கோரியதையடுத்து,
நிதி அமைச்சு மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் ஒருங்கிணைந்து இரண்டு திட்டங்களை
நடைமுறைப்படுத்தியுள்ளன.

NO COMMENTS

Exit mobile version