Home இலங்கை குற்றம் இரண்டு உயர் காவல்துறை அதிகாரிகள் குறித்து விசாரணை

இரண்டு உயர் காவல்துறை அதிகாரிகள் குறித்து விசாரணை

0

இரண்டு உயர் காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காவல்துறை திணைக்களத்தின் உயர் பதவிகளை வகித்து வரும் இரண்டு அதிகாரிகள் தொடர்பில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த காவல்துறை அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதிக் காவல்துறை மா அதிபர் மற்றும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஆகிய பதவிகளை வகித்து வரும் இருவர் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பிலான காவல்துறை பிரிவினால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இந்த அதிகாரிகள் இருவரும் பெருந்தொகை சொத்துக்களை சேர்த்துள்ளதாக முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

NO COMMENTS

Exit mobile version