Home இலங்கை அரசியல் 5 மாதங்களில் 600க்கும் மேற்பட்ட குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்த சட்ட மா அதிபர் திணைக்களம்

5 மாதங்களில் 600க்கும் மேற்பட்ட குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்த சட்ட மா அதிபர் திணைக்களம்

0

கடந்த ஐந்து மாத காலப் பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்ட குற்றப் பத்திரிகைகளை சட்ட மா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையில் பிரபல அரசியல்வாதிகள், அரச உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு எதிராகவும் இவ்வாறு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்றில் மொத்தமாக 607 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோ, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்ச, பிரபல கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்க மற்றும் பல போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக இவ்வாறு சட்ட மா அதிபர் திணைக்களம் குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.   

NO COMMENTS

Exit mobile version