Home இலங்கை குற்றம் விசேட அதிரடிப் படையினரால் 2 இலட்சம் போதை மாத்திரைகள் மீட்பு!

விசேட அதிரடிப் படையினரால் 2 இலட்சம் போதை மாத்திரைகள் மீட்பு!

0

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் 2 இலட்சம் போதை
மாத்திரைகள் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இரகசிய தகவல்

இந்தியாவில் இருந்து அதிக போதை மாத்திரைகள் மன்னார் கடல் பகுதியூடாகக் கடத்தி வரப்படுகின்றன என்று விசேட அதிரடிப் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

 

குறித்த தகவலின் அடிப்படையில் பேசாலையில் விசேட அதிரடிப் படையினர் நேற்று மேற்கொண்ட தேடுதலின் போதே 2 இலட்சம் போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக நடவடிக்கைக்காக சான்றுப்பொருள்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/2-lakh-drug-pills-recovered-by-special-task-force-1752329707

NO COMMENTS

Exit mobile version