Home இலங்கை கல்வி யாழ் பல்கலைக்கழகத்தில் இருவருக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!

யாழ் பல்கலைக்கழகத்தில் இருவருக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர்
பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீடத்தின் வணிகவியல் துறையைச் சேர்ந்த
சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும், விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச்
சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும் பேராசிரியர்களாகப் பதவி
உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று (28) ஒப்புதல் வழங்கியது.

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா (S.Srisatkunarajah) தலைமையில் இன்று (29) நடைபெற்றது.

பேராசிரியராக பதவி உயர்வு 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் (UGC) சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை
அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த முகாமைத்துவக் கற்கைகள்
மற்றும் வணிகபீடத்தின் வணிகவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான
கலாநிதி சிவபாலன் அச்சுதன் மற்றும் விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச்
சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முருகதாஸ் தணிகைச்செல்வன் ஆகியாரின்
மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் என்பன இன்றைய பேரவைக்
கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றின் அடிப்படையில், வணிகவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான
கலாநிதி சிவபாலன் அச்சுதன் வணிகவியலில் பேராசிரியராகவும், பௌதிகவியல் துறையைச்
சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முருகதாஸ் தணிகைச்செல்வன்
இலத்திரனியலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version