Home இலங்கை குற்றம் குழந்தைகளுக்கான நன்கொடை நிதியில் மோசடி : இருவர் கைது

குழந்தைகளுக்கான நன்கொடை நிதியில் மோசடி : இருவர் கைது

0

நன்கொடையாளர்களிடமிருந்து பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

புற்றுநோய் நிதிக்கு நிதியளிப்பதற்காக லிட்டில் ஹார்ட்ஸ் நிதியின் பெயரைப் பொய்யாகப் பயன்படுத்தி பொதுப் பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேக நபர்களையே இவ்வாறு  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (15) நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க (Buddhika Manatunga) இதனை தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள்

குறித்த சந்தேக நபர்கள் நன்கொடையாளர்களிடமிருந்து 2.9 மில்லியன் ரூபாவைப் பெற்று, அதை தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்தியதாக பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதய நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை வழங்குவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.

அந்த திட்டத்தின் பெயரை ஒரு குறிப்பிட்ட தரப்பினர் தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களிடமிருந்து பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபடுவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/2-million-scam-arrested-in-sri-lanka-1739615362

NO COMMENTS

Exit mobile version