Home இலங்கை குற்றம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற காதலன் – பொலிஸாரிடம் நாடகமாடிய காதலி கைது

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற காதலன் – பொலிஸாரிடம் நாடகமாடிய காதலி கைது

0

டுபாய்க்கு ரி-56 ரக துப்பாக்கியுடன் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் காதலியான நடன ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஒரு இரவு விடுதியில் நடனமாடும் போது பொலிஸ் கான்ஸ்டபிளை சந்தித்ததாகவும், அவருடன் காதல் உறவு கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

தப்பியோடிய கான்ஸ்டபிளை பற்றிய விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் நோய்வாய்ப்பட்டிருப்பதாக பாசாங்கு செய்த நடன ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காதலி கைது

ஆனால் மருத்துவமனை அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

சர்ச்சைக்குரிய கான்ஸ்டபிள் துப்பாக்கியுடன் கடமைக்கு செல்லவில்லை, மாறாக நடன ஆசிரியர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று பின்னர் வாடகைக்கு எடுக்கப்பட்ட வேனில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றதாக தெரியவந்துள்ளது.

அவர் டுபாயிக்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version