Home இலங்கை குற்றம் முள்ளியவளையில் வாள்வெட்டு! இருவர் மருத்துவமனையில் அனுமதி

முள்ளியவளையில் வாள்வெட்டு! இருவர் மருத்துவமனையில் அனுமதி

0

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளியவளை கிழக்கு
பகுதியில் நேற்று(23) இரவு இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் பாதிக்கப்பட்ட
இருவர் முல்லைத்தீவுமாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

முள்ளியவளை கிழக்கு பகுதியினை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரும் பொன்னகர்
முள்ளியவளை பகுதியினை சேர்ந்த 20 வயதுடைய நபர் ஒருவருமே இவ்வாறு
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

பொலிஸார் விசாரணை

இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இளைஞர் குழு
ஒன்று இருவர் மீது வாளால் வெட்டிவிட்டு அசிட் வீச்சு
தாக்குதலைமேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்
இந்த சம்வவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றார்கள்.

NO COMMENTS

Exit mobile version