Home இலங்கை குற்றம் தென்னிலங்கையில் தாயின் கொடூர செயல் – சிறுமியின் உயிரை காப்பாற்றிய மாணவர்கள்

தென்னிலங்கையில் தாயின் கொடூர செயல் – சிறுமியின் உயிரை காப்பாற்றிய மாணவர்கள்

0

காலியில் கிணற்றுக்குள் வீசப்பட்ட சிறுமியை, பாடசாலை மாணவர்கள் இருவர் காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரந்தெனிய பிரதேசத்தில் தாயார் தனது 3 வயது மகளை கிணற்றில் வீசிய கொலை செய்ய முயற்சித்த நிலையில் இரண்டு பாடசாலை மாணவர்கள் கிணற்றில் குதித்து சிறுமியை காப்பாற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரந்தெனிய கிரினுவில் பகுதியில் வசிக்கும் குஷினி ஷெஹாரா என்ற 3 வயது சிறுமியே காப்பாற்றப்பட்டுள்ளார்.


மருத்துவமனையில் சிகிச்சை

கிணற்றில் விழுந்த பின்னர் உயிர் பிழைத்த சிறுமி தற்போது எல்பிட்டிய ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளால் கோபமடைந்த தாய், தனது மகளை கிணற்றில் வீசிவிட்டு, தானும் கிணற்றில் குதித்து உயிரை மாய்க்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.


அலறல் சத்தம்

கிணற்றில் சிறுயின் அலறல் சத்தம் கேட்ட சாமிக லக்ஷான் மற்றும் ரோஷன் குமார ஆகிய இரண்டு மாணவர்கள் கிணற்றில் குதித்து சிறுமியை மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த 2 மாணவர்களும் கரந்தெனியவில் உள்ள பந்துல சேனாதீர வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version