Home இலங்கை கல்வி க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுத சென்ற இரு மாணவர்கள் மாயம்!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுத சென்ற இரு மாணவர்கள் மாயம்!

0

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுத சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பரீட்சை எழுத்துவதற்காக சென்ற இரு மாணவர்களும் நேற்று(26) முதல் காணாமல் போயுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முறைப்பாடு

அவர்கள் 26 ஆம் திகதி பாடசாலை சீருடையை அணிந்து, மஹியங்கனை தம்பராவ பரீட்சை மையத்திற்குச் செல்வதாகக் கூறி வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 வயதுடைய இந்த இரண்டு மாணவர்களும் மஹியங்கனையில் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தேர்வு எழுதச் சென்றிருந்த இருவரும் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் மஹியங்கனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.   

Source: https://tamilwin.com/article/2-students-missing-in-mahiyankanai-1743088515

NO COMMENTS

Exit mobile version