Home இலங்கை சமூகம் அடுத்த மாதம் வரை ஆயிரக்கணக்கான பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள பணி!

அடுத்த மாதம் வரை ஆயிரக்கணக்கான பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள பணி!

0

நாடு முழுவதும் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நியமிக்கப்பட்ட பொலிஸார் மே மாதம் 8 ஆம் திகதி வரை பணியில் ஈடுப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவரொட்டிகளை அகற்றல்

இதன்படி, ஒவ்வொரு பிரதான பொலிஸ் நிலையத்திற்கும் நான்கு பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மூன்று பேர் சிறிய நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், நாடு முழுவதும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களில் 605 பொலிஸ் நிலையங்களுக்கு பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version