Home இலங்கை சமூகம் வெளிநாடு பயணமாகியுள்ள பெருந்தொகை மின்சார சபை பொறியாளர்கள்

வெளிநாடு பயணமாகியுள்ள பெருந்தொகை மின்சார சபை பொறியாளர்கள்

0

கடந்த சில ஆண்டுகளில் இலங்கை மின்சார சபையின் பொறியாளர்களில் சுமார் 20 வீதமானோர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் 226 பொறியாளர்கள் இவ்வாறு நாட்டை வெளியேறியுள்ளதாக சபையின் செய்தித் தொடர்பாளர் தம்மிக விமலரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வேலை வாய்ப்புகளுக்காக அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

புள்ளிவிபரங்கள்

புள்ளிவிபரங்களின்படி, இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை இலங்கை மின்சார சபையின் மொத்த பொறியாளர்களில் 20 வீதமாகும்.

அவர்களில் 85 வீதம் பேர் மின் பொறியாளர்கள், மேலும் 8 வீதமானோர் இயந்திர பொறியாளர்கள் மற்றும் 7 வீதமானோர் சிவில் பொறியாளர்கள் என்று கூறப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version