Home இலங்கை சமூகம் 2004 சுனாமி அனர்த்தம்: 20 வருடங்களை கடந்துள்ள பெரும் துயரங்கள்

2004 சுனாமி அனர்த்தம்: 20 வருடங்களை கடந்துள்ள பெரும் துயரங்கள்

0

2004ஆம் ஆண்டு இலங்கை உட்பட பல நாடுகளில் பாரிய உயிர் மற்றும் உடமைச் சேதங்களை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் (26) 20 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி அன்று, இந்தோனேசியாவின் கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் இலங்கையின் 14 கரையோர மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. 

மேலும், 30,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கடல் வெள்ளத்தால் உயிரிழந்தனர்.

மௌன அஞ்சலி

சுமார் 5,000 பேர் காணாமல் போனதுடன் 502,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் பாரிய வீடு மற்றும் சொத்து சேதங்களும் அடங்கும்.

கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் இன்று (26) காலை 9.25 மணி முதல் காலை 9.27 மணிக்குள் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும்.

தேசிய பாதுகாப்பு தினமான இன்று இந்த மௌனம் கடைப்பிடிக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version