Home இலங்கை சமூகம் உச்சம் தொட்டுள்ள தேங்காய் விலை : இறக்குமதியால் வெடித்த சர்ச்சை

உச்சம் தொட்டுள்ள தேங்காய் விலை : இறக்குமதியால் வெடித்த சர்ச்சை

0

இலங்கையில் தேங்காய் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் இறக்குமதி செய்யப்படும் தேங்காய்களுக்கு சமமான பொருட்கள் உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படமாட்டாது என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு விளக்கமளித்துள்ளது.

இதன்படிமறு ஏற்றுமதி நோக்கங்களுக்காக மட்டுமே 200 மில்லியன் தேங்காய்களுக்கு சமமான தேங்காய் பால், மாவு மற்றும் குளிர்ந்த தேங்காய் சொட்டுகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

200 மில்லியன் தேங்காய் இறக்குமதி 

200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் அமைச்சு இதை தெளிவுபடுத்தியுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சின் செயலாளரும், கைத்தொழில் அமைச்சின் செயலாளரும் இதற்கான ஒரு குழுவை அமைத்துள்ளனர்.

அதன்படி, குழுவின் ஒப்புதலின்படி அடிப்படையில் தேங்காய் இறக்குமதி செய்யப்படும்.

அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல்

இது தொடர்பாக, பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு, கைத்தொழில் அமைச்சு, தென்னை ஆராய்ச்சி நிறுவனம், தென்னை சாகுபடி திணைக்களம், தென்னை மேம்பாட்டு அதிகாரசபை மற்றும் இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI) ஆகிய நிறுவனங்கள் இணைந்து அண்மையில் கைத்தொழில் அமைச்சில் ஒரு கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version