Home இலங்கை சமூகம் 2009ஆம் ஆண்டை மறந்த மூன்றாம் தலைமுறை பிள்ளைகள்! பிரபல தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன்

2009ஆம் ஆண்டை மறந்த மூன்றாம் தலைமுறை பிள்ளைகள்! பிரபல தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன்

0

2009ஆம் ஆண்டை மறந்த பிள்ளைகளாக, இல்லையென்றால் அந்த விடயங்களை தெரிந்துக்கொள்ள விரும்பாத பிள்ளைகளாக தற்போதைய மூன்றாம் தலைமுறையினர் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது என்று பிரபல தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

நேர்காணலொன்றின் போது கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இறுதியில் நடந்த சம்பவங்களை என்னால் இன்றுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஈழத்து மக்கள் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார ரீதியாக பாரிய வளர்ச்சியடைந்துள்ளமைக்கு தாயகத்தில் நடைபெற்ற போரும் ஒரு காரணம்.

2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதற்கு பிறகு அதற்கான தீர்வு இன்றுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதை நினைக்கும் போது வெறுமையாக உள்ளது.என்னிடம் எல்லாம் இருந்தும் ஒன்றுமில்லாததை போல் வெறுமையாக உள்ளது.

எங்களுடைய தேசம் எமது இனத்தினால் கட்டமைக்க வேண்டுமே தவிர வேறுயாரும் வந்து கட்டமைப்பார்கள் என்று காத்திருக்க கூடாது.அது சாத்தியமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான விபரங்களை கீழுள்ள காணொளியில் காண்க..   

NO COMMENTS

Exit mobile version