Home உலகம் ஹிஸ்புல்லா மீதான பேஜர் தாக்குதல் : அம்பலமான மொசாட்டின் திட்டம்!

ஹிஸ்புல்லா மீதான பேஜர் தாக்குதல் : அம்பலமான மொசாட்டின் திட்டம்!

0

லெபனானில் (Lebanon) உள்ள ஹிஸ்புல்லாவை (Hezbollah) குறிவைக்கும் பேஜர், மற்றும் வாக்கி – டாக்கி தாக்குதல் திட்டத்திற்கு பின்னால், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் (Mossad)இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் பற்றிய தகவல்களை சமீபத்தில் மொசாட்டில் இருந்து ஓய்வு பெற்ற இரண்டு மூத்த அதிகாரிகள்  வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில், பல ஹிஸ்புல்லா போராளிகள் பேஜர் மற்றும் வாக்கி – டாக்கி குண்டுவெடிப்பில் ஹிஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

பேஜர்  தாக்குதல்

2023ஆம் ஆண்டு ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலும் தற்போது வரை போரிட்டு வருகினறது.

இதன் ஒரு பகுதியாக இந்த கடந்த செப்டம்பர் 17ஆம் திகதி லெபனான் முழுவதும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்தன.

முக்கியமாக ஹிஸ்புல்லாக்கல் இருக்கும் பகுதிகளில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்ததுடன், இதனால் பெரும் பரபரப்பும் ஏற்பட்டிருந்தது. மறு நாள் வாக்கி-டாக்கிகள் வெடித்து, நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

மொசாட்

தாக்குதல் நடந்து இரண்டு மாதங்களுக்கு பின்னர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்தார்.

இந்நிலையில், இந்த தாக்குதலின் விபரங்களை சமீபத்தில் மொசாட்டில் இருந்து ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

மைக்கேல் என்று பெயரிடப்பட்ட முகவர்களில் ஒருவர், மொசாட் வாக்கி-டாக்கிகளை இயக்கும் பேட்டரிகளுக்குள் ஒரு வெடிக்கும் சாதனத்தை மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா 

இது பொதுவாக அணிந்தவரின் இதயத்திற்கு அருகில் ஒரு ஆடையில் கொண்டு செல்லப்படும் என்றும் 10 வருடங்களுக்கு முன்னர் ஒரு போலி நிறுவனத்திடம் இருந்து 16,000 வாக்கி-டாக்கிகளை நல்ல விலைக்கு ஹிஸ்புல்லா அறியாமல் வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேஜர்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நேரத்தில் ஹிஸ்புல்லா கோல்ட் அப்பல்லோ என்ற தைவானிய நிறுவனத்திடமிருந்து பேஜர்களை வாங்குவதைக் கண்டறிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஒரு போலி நிறுவனத்தை நிறுவி, தாய் நிறுவனத்திற்கு தெரியாமல் வெடிபொருட்களை கொண்ட பேஜர்களில் கோல்ட் அப்பல்லோ பெயரைப் பயன்படுத்தி மொசாட் வெடிமருந்துகளை உள்ளே வைத்ததாகவும், அது பயனரை மட்டுமே காயப்படுத்தும் சக்தி வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வான்வழித் தாக்குதல்

பேஜர்களை வாங்குவதற்கு, விளம்பரப் படங்கள் மற்றும் பிரசுரங்களை உருவாக்குவக்கி அவற்றை இணையத்தில் பகிர்ந்து  ஹிஸ்புல்லாவை ஏமாற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிஸ்புல்லா அமைப்பினர் பேஜர்களை மொசாட்டிடமிருந்து வாங்குகிறார்கள் என்பதற்கான துளி அளவும் சந்தேகம் வராத அளவிற்கு இந்த திட்டம் பயன்படுத்தப்பட்டதாகவும் திரைக்குப் பின்னால் மொசாடட்டினால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 17 ஆம் திகதி நடைபெற்ற இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பு இன்னும் மீளாத நிலையில், இஸ்ரேல் ஹிஸ்புல்லாவின் இலக்குகளுக்கு எதிராக தீவிர வான்வழித் தாக்குதல்களை தொடுத்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version