Home விளையாட்டு வரலாற்றை மாற்றியமைத்த தென்னாபிரிக்கா: இறுதி சமரில் களமிறங்கும் இந்தியா

வரலாற்றை மாற்றியமைத்த தென்னாபிரிக்கா: இறுதி சமரில் களமிறங்கும் இந்தியா

0

ரி20 வரலாற்றில் முதன் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள தென்னாபிரிக்காவிற்கு (South Africa) எதிராக முன்னாள் சம்பியனான இந்தியா (India) களமிறங்கவுள்ளது.

அதன் படி, 2024 ரி20 தொடரின் இறுதிப்போட்டியானது, நாளை (29) மேற்கிந்திய தீவுகளில் கிங்ஸ்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த ஜூன் 1ஆம் திகதி ஆரம்பமான 2024 ரி20 தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இங்கிலாந்தின் தோல்வி

அதன்படி, இறுதிப்போட்டிக்குள் முதல் அணியாக நுழைந்த தென்னாப்பிரிக்காவை சந்திக்கும் அணி எது என்ற சவால் மிக்க போட்டியானது நேற்றைய தினம் கயானாவில் நடைபெற்றது.

இந்த போட்டியில் நடப்பு சம்பியன் இங்கிலாந்தை முன்னாள் சம்பியன் இந்திய அணி எதிர்கொண்டது.

குறித்த போட்டியில் இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 7 விக்கட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்படி 172 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான பிலிப் சால்ட், பட்லர், ப்ரட்சோவ், மெயின் அலி, லிவிங்ஸ்டன் மற்றும் ஹெரி புரூக் ஆகியோர் குறைந்த ஓட்டங்களை பெற்று அணிக்கு ஏமாற்றமளித்தனர்.

தென்னாபிரிக்காவின் கனவு

இந்திய அணியின் சுழல்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கமானது மைதானத்தில் சிறப்பாக காணப்பட்டதால் இலகுவான வெற்றியை இந்தியா பதிவு செய்தது.

கடைசியாக 2014ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டிக்கு டோனி தலைமையில் இந்திய அணி முன்னேறி இலங்கையிடம் கோப்பையை பறிகொடுத்தது.

ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கோ சர்வதேச கிரிக்கெட்டில் இதுவே முதல் போட்டி. உலகின் சிறந்த கிரிக்கெட் அணி என்றால் பலரும் அவுஸிதிரேலியாவை கூறுவார்கள், அதன் பிறகு பலம் வாய்ந்த திறமையான வீரர்கள் உள்ள அணி என்றால் அனைவரும் தென்னாப்பிரிக்காதான்.

இந்த நிலையில் தென்னாபிரிக்க அணி திறமை வாய்ந்த அணியாக இருந்தாலும் அவர்களுக்கு உலக கோப்பை கனவு என்பது கனவாகவே மாறிவிட்டது.

பல்வேறு முக்கிய உலக கிண்ண தொடர்களில் மழையால் பாதிக்கப்பட்ட அணியாக தென்னாபிரிக்கா காணப்படுகிறது.

1992 ஆம் ஆண்டு உலககோப்பை தொடரிலிருந்து மழையின் குறுக்கீடு தென்னாபிரிக்காவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.

2003 ஆம் ஆண்டு உலக கோப்பை

முதல் முறையாக 1992 ஆம் ஆண்டு உலககோப்பை இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு தென் ஆப்பிரிக்காவுக்கு காணப்பட்டுள்ளது.

அரை இறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடிய போது 13 பந்துக்கு 22 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அப்போது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

அதன் பிறகு ஆட்டம் தொடர்ந்தபோது ஒரு பந்துக்கு 21 ஓட்டங்களை பெற வேண்டும் என்ற டக்வொர்த் லூயிஸ் விதியால் இலக்கு மாற்றப்பட்டது.

இதேபோன்று 2003 ஆம் ஆண்டு உலக கோப்பை ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா இலங்கை அணிகள் பலப் பரிசை நடத்தியது.

இதில் கடைசி நேரத்தில் இலங்கை அணியை வீழ்த்தினால் அடுத்த சுற்றுக்கு தென்ஆப்பிரிக்கா செல்லலாம் என்ற நிலை இருந்தது.

தென்னாப்பிரிக்காவின் முக்கிய ஆட்டங்கள்

தென்னாபிரிக்க அணி 45 ஓவர்களில் 229 ஓட்டங்களை பெறவேண்டும் என்ற நிலையில் அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.

இந்த சூழலில் தென் ஆப்பிரிக்க அணி 1 ஓட்டம் பின்தங்கி இருப்பதாக டக்வொர்த் லூயிஸ் விதி கூறியது.

இதன் காரணமாக போட்டி சமனில் முடிவடைந்த நிலையில் தென்னாபிரிக்க அணி தொடரிலிருந்து வெளியேறியது.

இதுபோன்று 2015 ஆம் ஆண்டு உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை குறிக்கிட்டு ஆட்டத்தையும் மாற்றியது.

இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இப்படி மழையால் தென்னாப்பிரிக்காவுக்கு முக்கிய ஆட்டங்கள் அனைத்தும் உலகக்கிண்ண கனவுகளை தகர்த்திருந்தன.

இறுதியாக 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் யாருமே எதிர்பாராத வகையில் கொல்கத்தாவில் மழை மேகங்கள் சூழ்ந்தது.

இதனால் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக மாற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கில் கடுமையாக தடுமாறி தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதியது.இதில் வழக்கம் போல் மழை குறுக்கிட்டது.

ஆனால் முதல் முறையாக மழை தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமாக மாற அந்த அணி வெற்றி இலக்கை கடந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 

NO COMMENTS

Exit mobile version