Home இலங்கை பொருளாதாரம் தனியார் துறை ஊழியர்களுக்கான மாதாந்த ஊதியம் அதிகரிக்கப்படும்!

தனியார் துறை ஊழியர்களுக்கான மாதாந்த ஊதியம் அதிகரிக்கப்படும்!

0

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை 21,000 ரூபாவிலிருந்து 27,000 ரூபாவாக உயர்த்துவதற்கு முதலாளிகள் சங்கங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Disanayaka) தெரிவித்தார். 

இதனை 2025 – ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு கொண்டு வர முதலாளிகள் சங்கங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

தற்போது நாடாளுமன்றத்தில் முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட (Budget – 2025) முன்மொழிவின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்படி, தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்த ஊதியம் 2026ஆம் ஆண்டு முதல் 30,000 ரூபாவாக உயர்த்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார். 

NO COMMENTS

Exit mobile version