Home இலங்கை கல்வி புலமைப்பரிசில் பரீட்சை : வவுனியாவில் பரீட்சைக்கு தோற்றியோர்

புலமைப்பரிசில் பரீட்சை : வவுனியாவில் பரீட்சைக்கு தோற்றியோர்

0

2025ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் இன்று (10) காலை
9.00 மணிக்கு ஆரம்பமாகியது.

வவுனியா (Vavuniya) மாவட்டத்தில் பரீ்ட்சைக்கான அனைத்து தயார்படுத்தல்களும் ஏற்கனவே
பூர்த்தி செய்யப்பட்டிருந்தது.

அந்தவகையில் வவுனியா வடக்கு வலயத்தில் 503
மாணவர்களும், தெற்கு வலயத்தில் 2,562 பேரும் என 3,065 மாணவர்கள் இம்முறை
பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

பரீட்சைக்கு தோற்றியோர்

அவர்களுக்காக 44 பரீட்சை மத்திய நிலையங்களும்,19 இணைப்புக்காரியாலங்களும்
அமைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு சுமார் 3இலட்சத்து
7ஆயிரத்து951 மாணவர்கள் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version