Home இலங்கை அரசியல் சற்றுமுன்னர் இடைநடுவே ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு

சற்றுமுன்னர் இடைநடுவே ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு

0

புதிய இணைப்பு 

நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12.30 மணியளவில் ஒத்திவைக்கப்படவிருந்த நிலையில், தற்போது இடைநடுவிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த நாடாளுமன்ற அமர்வு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி முற்பகல் 09.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நான்காம் இணைப்பு

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானதைத் தொடர்ந்து இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, இன்றைய தினத்திற்குரிய செலவுத் தலைப்புகள் நண்பகல் 12.30 மணியளவில் நிறைவேற்றப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி முற்பகல் 9.00 மணி வரை ஒத்திவைக்கப்படும் என்றும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (01) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

மூன்றாம் இணைப்பு

ஒரு மணித்தியாலங்களுக்கு மேலாக ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.

இரண்டாம் இணைப்பு

சபாநாயகர் தலைமையில் இன்று (01) காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய நாடாளுமன்ற அமர்வு சபாநாயகரால் 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதன்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதா என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் இணைப்பு 

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் சபாநாயகர் தலைமையில் இன்று (01.12.2025) காலை 9 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியது.

இந்த குழுநிலை விவாதமானது கடந்த 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 09.00க்கு ஆரம்பமான இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் நள்ளிரவு 12.00 வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, காலை 09.00 முதல் 09.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காலை 09.30 முதல் 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 10.00 முதல் 10.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.30 முதல் மாலை 6.00 வரை ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2026 இன் இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம் நடைபெறவுள்ளது.

மாலை 6.00 முதல் நள்ளிரவு 12.00 வரை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/tRZFncE9CT0

NO COMMENTS

Exit mobile version