Home இலங்கை கல்வி புலமைப்பரிசில் பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு!

புலமைப்பரிசில் பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு!

0

2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை மறுதினம் (09.08.2026) நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை பரீட்சை நடைபெறும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.  

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் 5 ஆம் வகுப்ப புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

294,089 பரீட்சார்த்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மொத்தம் 294,089 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், பாடநெறி சார்ந்த விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்களுக்கான தடை நேற்று முன்தினம் (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த தடையானது பரீட்சை நிறைவடையும் வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் இந்த வருடத்திற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/2026-scholarship-exam-department-of-examination-1786099941

NO COMMENTS

Exit mobile version