இந்தோனேஷியாவின்(Indonesia) சுமத்ராதீவில் ஏற்பட்ட கடலுக்கடியிலான நிலநடுக்கம் சுனாமி ஆழிப் பேரலையாக இலங்கை உட்பட பல நாடுகளையும் பாதிக்கச் செய்த நிகழ்வு ஏற்பட்டு இன்றுடன் 20 வருடங்களாகின்றது.
ஒரு சில நிமிடங்களில் ஆசியா கண்டத்தின் 10 நாடுகளில் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள தீவுகளில் மூன்று இலட்சம் வரையான மக்கள் பலியாகினர்.
உடைமைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் மதிப்பிட இயலாதவை.
சுனாமி ஏற்பட்டு 20 வருடங்கள் கடந்த போதிலும் அதன் வடுக்களிலிருந்து இன்னும் இலங்கையின் சில பகுதிகள் மீளாத நிலையில் உள்ளன.
உறவினர் மற்றும் நெருக்கமானவர்களை இழந்த துயரங்கள் ஒருபுறமிருக்க மக்களில் பலர் இழப்புகளில் இருந்து இன்னும் மீளவில்லை.
இவ்வாறான ஒரு இயற்கையின் சீற்றம் ஏற்படும்போது மக்கள் விழிப்பாக தங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கடந்த சுனாமி பேரழிவு எமக்கு உணர்த்தியுள்ளது.
சுனாமி பேரலை தாக்கி 20 வருடங்கள் கடந்துள்ள நிலையில் சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் பற்றிய அறிவினை பெற்றுக் கொள்வதே மக்கள் அதிலிருந்து ஓரளவு தம்மை தற்காத்துக் கொள்ள சிறந்த வழியாகும்.