நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வெள்ளத்தில் சிக்கிய 21 வெளிநாட்டவர்களை இலங்கை விமானப்படை (SLAF) வெற்றிகரமாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனுராதபுரம் விமானப்படைத் தளத்தின் இலக்கம் 06 உலங்கு வானூர்தி படைப்பிரிவைச் சேர்ந்த MI-17 உலங்கு வானூர்தி மூலம் மீட்புக்குழுவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கட்டுநாயக்க விமானப்படைத் தளம்
மீட்கப்பட்ட வெளிநாட்டவர்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திற்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இந்தநிலையில் கண்டி – மினிப்பே பிரதேச செயலகப் பிரிவின் உடவத்த, நெலும்மல் கிராமத்தில் மண்சரிவில் சிக்கிய 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் கண்டி – உடுதும்பர, கங்கொட கிராமத்தில் மண்சரிவில் சிக்கிய 15 பேரின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
