Home முக்கியச் செய்திகள் 22 A: 502 இலிருந்து 501க்கு மாற்றம்

22 A: 502 இலிருந்து 501க்கு மாற்றம்

0

 

22ஆவது திருத்த அரசியலமைப்புத் தொடர்பிலான மனுக்களைச் செவிமடுப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த நீதிமன்றக் கூடம் மாற்றப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் மனுக்களை விசாரணைக்காக அழைத்த 502ஆம் இலக்க நீதிமன்றக் கூடத்தில் போதிய இடவசதி இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஐவரடங்கிய நீதிபதிகள் குழாமிடம் விடுத்த கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணைகள் கூடிய இடவசதியைக் கொண்ட 501ஆம் இலக்க நீதிமன்றக் கூடத்திற்கு மாற்றப்பட்டது.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன (Preethi Padman Surasena), உயர் நீதிமன்ற நீதியரசர்களான அச்சுல வெங்கப்புலி (Achala Vengappuli), அர்ஜுன ஒபேசேகர (Arjuna Obeyesekere), சம்பத் அபேகோன் (Sampath Abeykoon) மற்றும் கிஹான் குலதுங்க (Gihan Kulatunga) ஆகியோரை உள்ளடக்கிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

 

Source: https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/22-A-502-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-501%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/150-382186

NO COMMENTS

Exit mobile version