Home உலகம் சிரியாவில் துப்பாக்கிச் சூடு: அரசின் ஆதரவு படையில் 22 பேர் பலி

சிரியாவில் துப்பாக்கிச் சூடு: அரசின் ஆதரவு படையில் 22 பேர் பலி

0

சிரியாவில் குட்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பேருந்தில் செல்லும் போது அந்த பேருந்து மீது சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியமையில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது ஐஎஸ் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியான சுக்னா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த குட்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்தர்கள் அரசுக்கு ஆதரவாகவும் மற்றும் சிரியாவில் ரஷ்யா ஆதரவு பெற்ற பலஸ்தீனத்தைச் சேர்ந்த சண்டையிடுபவர்களும் ஆவார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனம்: திட்டத்தை முறியடித்த அமெரிக்கா

சிரியா கண்காணிப்பகம்

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்காவிட்டாலும் மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பகம் இந்த தாக்குதலுக்குப்பின் ஐஎஸ் உள்ளதாக தெரிவித்துள்ளது.

13 வருட உள்நாட்டு சண்டையில் குட்ஸ் படைப்பிரிவினர் சிரியா அரசாங்கத்திற்கு ஆதரவாக சண்டையிட்டு வருகிறது.

இந்த உள்நாட்டு சண்டையில் சுமார் ஐந்து லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தடம் மாறும் இஸ்ரேல் – ஈரான் போர்.. ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!

உள்நாட்டு சண்டை

உள்நாட்டு சண்டைக்கு முன்னதாக இருந்த 23 மில்லியன் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்களது சொந்த இடத்தை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.

குட்ஸ் படைப்பிரிவு பலஸ்தீனத்தின் இஸ்லாமிக் ஜிஹாத் குழுவில் உள்ள நிலையில் அதில் இருந்து சிரியாவில் செயல்பட்டு வரும் குட்ஸ் படைப்பரிவு மாறுபட்டது.

மேலும் 2019 இல் ஐஎஸ் படைகள் தோற்கப்பட்ட போதிலும் ஐஎஸ் ஸ்லீப்பர் செல்கள் சிரிய அரசாங்க படைகள், அமெரிக்க ஆதரவு படைகள், குர்திஷ் தலைமையிலான சிரியா ஜனநாயக படைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம்சாட்டுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் : உச்சத்தை தொட்ட எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version