Home இலங்கை சமூகம் தொழிலாளர் வருங்கால நிதிக்கு பங்களிக்காத 22 ஆயிரம் நிறுவனங்கள்

தொழிலாளர் வருங்கால நிதிக்கு பங்களிக்காத 22 ஆயிரம் நிறுவனங்கள்

0

ஈ.டி.எப் என்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு கிட்டத்தட்ட 22,450
நிறுவனங்கள் பங்களிக்கத் தவறிவிட்டதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த
ஜெயசிங்க (Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான எச்.எம்.டி.என்.கே. வட்டலியத்த
இன்று (24) புதிய தொழிலாளர் ஆணையர் நாயகமாக பொறுப்பேற்றுக் கொண்டபோது அவர் இந்தக்
கருத்தை வெளியிட்டுள்ளார்.

குறித்த நிறுவனங்களின் நிலுவையில் உள்ள ஊழியர் சேமலாப நிதி பங்களிப்புகள் 36
பில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் சட்டம்

இதேவேளை தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துவதற்காக தொழிலாளர் சட்டங்களில்
திருத்தங்களை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண் ஊழியர்களுக்கான பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சிறுவர்
தொழிலாளர்களை ஒழிப்பதற்கும் அரசாங்கத்தின் தொடர் முயற்சிகளை அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version