இணையத்தளம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திகன பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான இளைஞன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிமுகமான நபரொருவரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இணையத்தில் பணம் வருமானமாக ஈட்டலாம் என கூறி 05 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.