Home இலங்கை குற்றம் யாழில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் 220 கிலோகிராம் போதைப்பொருள் மீட்பு..!

யாழில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் 220 கிலோகிராம் போதைப்பொருள் மீட்பு..!

0

யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் 220 கிலோ கிராம் கஞ்சாவுடன் படகு ஒன்றும் வெளியிணைப்பு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இராணுவ புலனாய்வு துறை மற்றும் சிறப்பு அதிரடி படை இணைந்து இன்று அதிகாலையில்
மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே கஞ்சாவுடன் குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுற்றிவளைப்பு

இலங்கை இராணுவ புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடல் மார்க்கமாக கொண்டுவந்த கஞ்சா 220 கிலோகிராமை இறக்கிக் கொண்டிருந்த போது இராணுவ புலனாய்வுத்துறையும், சிறப்பு அதிரடி படையினரும் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும் 220 கிலோகிராம் கஞ்சாவும், படகும் அதன் வெளியிணைப்பு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட 220 கிலோகிராம் கஞ்சாவையும், படகு மற்றும் வெளியிணைப்பு இயந்திரம் என்பனவற்றை பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்க சிறப்பு அதிரடி படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

NO COMMENTS

Exit mobile version