Home இலங்கை 24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர பணிப்புறக்கணிப்புக்கு தீர்மானம்

24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர பணிப்புறக்கணிப்புக்கு தீர்மானம்

0
image

ரயில்வே திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் 48 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.

ரயில்வே பொது முகாமையாளரின் தன்னிச்சையான நிர்வாக நடவடிக்கைகள் காரணமாக ரயில் சேவை நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

இதன் காரணமாக பயணிகள் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தற்போதைய நிலைமை தொடர்பில் குரல் எழுப்பும் தொழிற்சங்க அதிகாரிகளை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, ரயில்வே திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து 48 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/24-railway-unions-have-decided-on-a-48-hour-strike-1788860550

NO COMMENTS

Exit mobile version