இன்றைய நவீன உலகானது பல்துறைகளிலும் வளர்ச்சி கண்டு வருகின்றமையை காணலாம். அவ்வகையிலேயே மருத்துவத்துறையானது அபரிவிதமான வளர்ச்சியை சந்தித்துள்ளது.
இன்று மருத்துவத்துறை வளர்ச்சி காரணமாக எண்ணிலடங்கா சாதனைகளை உலகம் கண்டு வருகின்றது.
மருத்துவம்
நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும் அறிவியலும் சேர்ந்ததே மருத்துவம் ஆகும்.
மருத்துவமானது நோய்களை கண்டறியவும் அவற்றை குணப்படுத்தவும் நோய்கள் வராமல் தடுப்பதற்கும் உதவுகின்ற அறிவியல் செயற்பாடு எனலாம்.
மருத்துவம் என்பது மனிதர்களின் உடல்நலத்தை பேணுதல், நோய் வராமல் தடுத்தல், நோய்களிலிருந்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு உடல்நலச் செயல்முறைகளை உள்ளடக்கும்.
மருந்தகங்களின் தேவை
கொலை பின்னணி: 33 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜெர்மனியில் கைது
மருத்துவத்துறையில் நோய் நீக்கும் வைத்தியர்களும், வைத்தியசாலைகளும் இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத விடயமாக இருக்கிறது.
அதேநேரம் மருந்தகங்களும் முக்கியமல்லவா?
வைத்தியசாலைகளை அடுத்து மருந்தகங்களை நம்பியே பலரும் தமது அன்றாட மருந்து தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர் என்பதே நிதர்சனம்.
தற்காலத்தை பொறுத்த வரையில் அடிப்படை நோய்கள் தொடர்பான விழிப்புணர்வும், அதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் தொடர்பான விழிப்புணர்வும் பெரும்பாலானோரிடம் இருக்கிறது என்பதும் அனைவரும் அறிந்த விடயம்.
எனவே மருந்தகங்கள் மூலமாக தமது மருந்து தேவைகளை பூர்த்தி செய்து கொள்பவர்கள் ஏராளம்.
ஆனால் கொழும்பு உள்ளிட்ட பரபரப்பான நகரப் பகுதிகளை தவிர வேறு எத்தனை பகுதிகளில் 24 மணிநேரமும் இயங்கும் மருந்தகங்கள் இருக்கின்றன என்று பார்த்தால் கேள்விக்குறியே.
குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை இரவு நேரத்தில் இக்கட்டான சந்தர்ப்பத்தில் மருந்து இன்றி தவிக்கும் போது மருந்துகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு எந்தெந்த பகுதி மக்களுக்கு கிடைக்கிறது?
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 5 ஆண்டு நிறைவு: 2 நிமிட மெளன அஞ்சலிக்கு அழைப்பு
வைத்தியர் வழங்கிய பற்றச்சீட்டு இருந்தாலும் அவசர தேவைக்கு இரவு நேரங்களில் இயங்கும் மருந்தகங்கள் பல பகுதிகளில் கண்ணில் எட்டும் தூரத்திற்கு இருப்பதில்லை.
வைத்தியசாலைகள் எந்தளவிற்கு முக்கியமோ அந்தளவிற்கு மருந்தகங்கள் இல்லை இல்லை 24 மணிநேரமும் இயங்கும் பொறுப்பு வாய்ந்த மருந்தங்கள் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |