Home இலங்கை சமூகம் வவுனியாவில் சீரற்ற காலநிலையால் உடைப்பெடுத்த குளங்கள் புனரமைப்பு

வவுனியாவில் சீரற்ற காலநிலையால் உடைப்பெடுத்த குளங்கள் புனரமைப்பு

0

கடும் மழை மற்றும் புயல் காரணமாக வவுனியாவில் உடைப்பெடுத்த குளங்களில் 24
குளங்களுடைய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், 6 குளங்களினுடைய
கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கடும் மழை மற்றும் புயலின் காரணமாக
வவுனியா மாவட்டத்தில் 114 குளங்கள் உடைப்பெடுத்திருந்தன.

புனரமைப்பு

உடைப்பெடுத்த
குளங்களை புனரமைப்பதற்கான செயற்பாடுகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு
மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் என்பவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.

இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் கமக்கார அமைப்பினரின் உதவியுடன் 24
குளங்கள் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளதுடன், 6 குளங்களினுடைய புனரமைப்பு
வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஏனைய குளங்களையும் புனரமைப்பதற்கான செயற்பாடுகள் தொடர்பில் கவனம்
செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version