யாழில் பிறந்து 25 நாட்களேயான ஆண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(21) இடம்பெற்றுள்ளது.
ஆதித்தியன் கிருஷாளினி என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு
உயிரிழந்துள்ளது.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குழந்தைக்கு கடந்த முதலாம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது.
இந்நிலையில்
சிகிச்சைக்காக குறித்த குழந்தையை யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலை சேர்ப்பித்தனர்.
இருப்பினும் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிரேம்குமார் மேற்கொண்டார்.
மூளையில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக மரணம்
சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
