Home இலங்கை குற்றம் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலருக்கு பாதாள உலக கும்பலினால் கொலை மிரட்டல்

முக்கிய பிரமுகர்கள் உட்பட பலருக்கு பாதாள உலக கும்பலினால் கொலை மிரட்டல்

0

மேல் மாகாணத்தின் முக்கிய பிரமுகர்கள் உட்பட இருபத்தைந்து பேர், திட்டமிட்ட பாதாள உலக குற்றவாளிகளால் கொலை மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் மா அதிபரின் (ஐ.ஜி.பி) அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை ஏற்கனவே சம்பந்தப்பட்ட பொலிஸ் மா அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பாதுகாப்பு நடவடிக்கை

குறித்த நபர்களின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்காக இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, சம்பந்தப்பட்ட பொலிஸ் மா அதிபர்கள் அவர்களில் பலரின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version